/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் "ஐ.ஏ.எஸ்., அகடமி' உணவுத்துறை அமைச்சர் உறுதி
/
நீலகிரியில் "ஐ.ஏ.எஸ்., அகடமி' உணவுத்துறை அமைச்சர் உறுதி
நீலகிரியில் "ஐ.ஏ.எஸ்., அகடமி' உணவுத்துறை அமைச்சர் உறுதி
நீலகிரியில் "ஐ.ஏ.எஸ்., அகடமி' உணவுத்துறை அமைச்சர் உறுதி
ADDED : அக் 08, 2011 12:30 AM
குன்னூர் : ''நீலகிரியில் ஐ.ஏ.எஸ்., அகடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மாநில உணவுத் துறை அமைச்சர் புத்தி சந்திரன் உறுதியளித்தார்.குன்னூர் படுகர் நலச்சங்கத்தின் சார்பில் சங்கத்தின் 13வது ஆண்டு விழா; உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரனுக்கு பாராட்டு விழா; 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது.
குன்னூர் உபாசி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், சங்க உறுப்பினர் ராஜூ கடவுள் வாழ்த்து பாடினார். துணைத் தலைவர் மூர்த்தி வரவேற்றார். செயலர் கென்னடி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜன் வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தலைமை வகித்து சங்க தலைவர் டாக்டர். மணி பேசினார். தொடர்ந்து, 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, அமைச்சர் புத்திச்சந்திரன் பேசுகையில், ''நீலகிரி மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'ஐ.ஏ.எஸ்., அகடமி' துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். சங்க செய்தி தொடர்பாளர் துரைராஜ், சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராமன், ருக்மணி, கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் சந்திரசேகரன், கோடமலை ஊர் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர்.கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சங்க இணை செயலர் அர்ஜூனன் நன்றி கூறினார்.

