sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுயேச்சைகளால் அரசியல் கட்சியினருக்கு "ஜுரம்'

/

சுயேச்சைகளால் அரசியல் கட்சியினருக்கு "ஜுரம்'

சுயேச்சைகளால் அரசியல் கட்சியினருக்கு "ஜுரம்'

சுயேச்சைகளால் அரசியல் கட்சியினருக்கு "ஜுரம்'


ADDED : அக் 08, 2011 12:32 AM

Google News

ADDED : அக் 08, 2011 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான போட்டியில், சுயேட்சை வேட்பாளர்களால் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் அச்சமடைந்துள்ளன.கோத்தகிரி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில், வாப்பு (அ.தி.மு.க) வீரபத்திரன் (தி.மு.க), வடிவேல் (ம.தி.மு.க).

ராஜூ (காங்), தே.மு.தி.க., கூட்டணி (விஸ்வநாதன்), நஞ்சுண்டன் (பா.ஜ) மற்றும் அழகு (பா.ம.க) ஆகியோர் களத்தில் உள்ளனர்.இவர்களை தவிர, 4 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மொத்தம் 20 ஆயிரத்து 57 வாக்காளர்கள் உள்ளனர்.கோத்தகிரி நகரம் தவிர, பெரும்பாலான வார்டுகள் கிராமங்களில் உள்ளன. படுகர் கிராமங்கள் அடங்கிய பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு 60 சதவீத ஓட்டுகள் உள்ளதால், படுகர் சமுதாயத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளர் நஞ்சுண்டன், தனது கட்சி நிர்வாகிகளுடன் பிற ஓட்டுகளை பெற தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.இவரை போலவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜூவும் கிராம ஓட்டுகளை பெற களத்தில் இறங்கியுள்ளார்.அரசியல் கட்சிகளை தவிர, சுயேச்சையாக போட்டியிடும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த மனோஜ் காணி மற்றும் தோணா கவுடர் ஆகியோரும் பிரசாரத்தில் கிராம ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது.நகர பகுதியை பொறுத்தமட்டில் தி.மு.க., வேட்பாளர் வீரபத்திரனுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பினும், தொடர்ந்து மூன்று முறை கவுனசிலராக உள்ள ம.தி.மு.க., வேட்பாளர் வடிவேல் ஓட்டுகளை பிரிக்க உள்ளார்.இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஆளும் கட்சி வேட்பாளர் வாப்பு, மூன்று முறை கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும், நகர பகுதியில் அ.தி.மு.க., ஓட்டுகளுடன், இஸ்லாமியர் ஓட்டுகளை பெறும் வகையில் இவரின் பிரசாரம் அமைந்துள்ளது.கோத்தகிரி நகர பகுதியில் கிறிஸ்தவர் ஓட்டுகளை தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., வேட்பாளர்களுடன், சுயேச்சைகளும் பெருமளவில் பிரிப்பதால், குறைந்த ஓட்டு எண்ணிக்கையில் மட்டுமே முக்கிய இரு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற முடியும்.








      Dinamalar
      Follow us