/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தோட்டங்களில் வெட்டப்படும் மரங்கள்
/
தனியார் தோட்டங்களில் வெட்டப்படும் மரங்கள்
ADDED : அக் 08, 2011 11:08 PM
குன்னூர் : சில்வர் ஓக் மரங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடத்தல் அதிகரிக்கிறது.
நீலகிரியில் உள்ள அரசு, தனியார் தோட்டங்களில் மரங்களை வெட்டி, கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான தனியார் தோட்டங்களில் சில்வர் ஓக், கற்பூரம் உட்பட மரங்கள் பல ஆண்டாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை மிகபழமையாகி விழும் நிலையில் உள்ளதால், அவற்றை வெட்டுவதற்கு சம்மந்தப்பட்ட வனத்துறையிடம் அனுமதி கோருகின்றனர்; வனத்துறையின் பரிந்துரைக்கேற்ப மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான பிரத்யேக கமிட்டி, 'தோட்டங்களில் மரங்களை வெட்டுவோர், அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை மறுநடவு செய்ய வேண்டும்,' என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்குகின்றனர்.அனுமதி பெற்று மரங்களை வெட்டிய தனியார், வெட்டிய மரங்களை கொண்டு செல்ல அனுமதியில்லாததால், வெட்டிய இடத்திலேயே மரங்களை போட்டு வைத்துள்ளனர்.குன்னூர் பாலகிளவா, கோத்தகிரி உட்பட இடங்களில் தனியார் தோட்டத்தில் வெட்டப்பட்டுள்ள மரங்கள் ஆங்காங்கே போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், மரங்கள் சூழ்ந்திருந்த அப்பகுதி, மரம் நடவு செய்யாமல் 'மொட்டையாக' காட்சியளிக்கிறது. சில இடங்களில் கடத்தல் காரர்கள் மட்டும் 'கவனிப்பின்' பேரில் மரங்களை இரவில் கடத்தி வருகின்றனர்.

