/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி பறவை இனங்களின் எண்ணிக்கை வெளியிட முடிவு
/
நீலகிரி பறவை இனங்களின் எண்ணிக்கை வெளியிட முடிவு
ADDED : மார் 05, 2024 09:07 PM

கூடலுார்:'நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம் உள் வட்டம், முதுமலை மசினகுடி கோட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள், கடந்த 2, 3 தேதிகளில் நடந்தது.
இதில், முதுமலை, கூடலுார் வனக்கோட்டத்தில், 82 இடங்களை தேர்வு செய்து அப்பகுதியில் பறவை இனங்கள், அவைகளின் வாழ்வியல் குறித்த விபரங்களை, வன ஊழியர்கள் தன்னார்வலர்கள் புகைபடத்துடன் பதிவு செய்தனர். கணக்கெடுப்பு விபரங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பறவை இனங்கள் குறித்த கணக்கெடுப்பு விபரங்கள், ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது, ஆய்வின் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள பறவையினங்களின் எண்ணிக்கை, மாவட்டத்தில் உள்ள பறவைகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியிடப்படும்,' என்றனர்.

