/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் நீலகிரி அரசுத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

ADDED : அக் 21, 2024 04:39 AM

பந்தலுார் : கேரள மாநிலம் வயநாடு பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நீலகிரி அரசுத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே சூரல்மலை மற்றும் முண்டக்கை, புஞ்சரிமட்டம் ஆகிய பகுதிகள், கடந்த ஜூலை, 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் உருக்குலைந்து போயின. அதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர்.
அவர்களின் உடல்கள் மண்ணுக்கடியில் புதைந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில், உறவினர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு, தொடர் ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னுார் சப்-கலெக்டர் சங்கீதா, உள்ளிட்ட பொது சுகாதாரம், தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு துறை, நகராட்சி, புவியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், 15 பேர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வயநாடு மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில், நிலச்சரிவு மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பேரிடர் காலங்களில் நீலகிரியில் மேற்கொள்ள வேண்டிய அவசர பணிகள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்தது.