sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.18.14 விலை நிர்ணயம்

/

 நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.18.14 விலை நிர்ணயம்

 நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.18.14 விலை நிர்ணயம்

 நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.18.14 விலை நிர்ணயம்


ADDED : ஜன 05, 2026 05:00 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: 'நீலகிரி மாவட்டத்தில் டிச., மாதத்திற்கான, பசுந்தேயிலை விலை கிலோவுக்கு, 18.14 ரூபாய்,' என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குன்னுார் தேயிலை மையம் மற்றும் இன்கோசர்வ் மையத்தில், ஏலம் விடப்படும், தேயிலை துாளுக்கான விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை துாளுக்கு அந்தந்த மாதம் நடக்கும் ஏலங்களின் அடிப்படையில், குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்து வருகிறது.

இதன்படி,''தேயிலை, 30-ஏ 5 (ஏ) பிரிவின், மார்க்கெட் கட்டுப்பாடு, 2வது திருத்தம் அடிப்படையில், டிச., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 18.14 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் கூறுகையில்,''இந்த விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும். இதனை, தென்னிந்திய தேயிலை வாரிய அனைத்து கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பர்,'' என்றார். கடந்த நவ., மாதத்தை விட, டிச., மாதத்திற்கான விலை, கிலோவிற்கு, 2.54 ரூபாய் அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us