/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளை கிழங்கு பாதுகாப்பு அறையின் மானிய தொகையை உயர்த்த வேண்டும்! நீலகிரி மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
/
உருளை கிழங்கு பாதுகாப்பு அறையின் மானிய தொகையை உயர்த்த வேண்டும்! நீலகிரி மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
உருளை கிழங்கு பாதுகாப்பு அறையின் மானிய தொகையை உயர்த்த வேண்டும்! நீலகிரி மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
உருளை கிழங்கு பாதுகாப்பு அறையின் மானிய தொகையை உயர்த்த வேண்டும்! நீலகிரி மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2025 05:34 AM

ஊட்டி; 'நீலகிரி உருளைக்கிழங்கு விவசாயிகள் 'சப்பம் கட்டும் அறை' என்ற பாதுகாப்புக்கான அறை அமைக்க வழங்கப்படும் மானியத்தை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்,' என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக உருளை கிழங்கு மற்றும் பிற மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக , நீலகிரியில் விளைவிக்கப்படும் உருளைகிழங்கிற்கு நல்ல ருசி உள்ளது.
ஆண்டுதோறும், 'கார் போகம், நீர்போகம், கடைபோகம்,' என, மூன்று பருவத்தில், 400 ஏக்கரில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனம், தனியார் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தமிழகம் உட்பட வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மானியத்தை உயர்த்த கோரிக்கை
இந்நிலையில், விவசாயிகள் தோட்டங்களில் அறுவடை செய்யும் உருளை கிழங்கை சேமித்து வைத்து, ஏற்றுமதி செய்யஏதுவாக 'சப்பம்' என்ற பாதுகாப்பு அறை தேவைப்படுகிறது.
இந்த வசதி ஏற்படுத்த மத்திய அரசு, ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், விவசாயிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகிறது. அதே சமயத்தில் இந்த வசதி ஏற்படுத்த குறைந்தது, 8 முதல் 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கட்டுமான பொருட்களின் விலை சமவெளி பகுதிகளை காட்டிலும் மலை மாவட்டத்தில் அதிகம் என்பதால் மானிய தொகையை உயர்த்திதரக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உருளைக்கிழங்கு மற்றும் மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பாபு கூறுகையில், ''நீலகிரியில் உருளைக்கிழங்கு அறுவடைக்குப் பின், அவற்றை சேமித்து வைத்து விற்பனை செய்ய, 20 க்கு 30 அடியில் 'சப்பம் கட்டும் அறை' என்ற ஏற்படுத்தி. அதில், அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும்.
''கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பால் மானிய தொகையை மத்திய அரசு, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளோம். இதனால் உற்பத்தி குறைந்து வரும் உருளை கிழங்கு பயிரிடுவதை அதிகரிக்கவாய்ப்புள்ளது,'' என்றார்
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''மத்திய அரசின் ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கேட்கும் கூடுதல் மானிய கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு கருத்துரு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.