ADDED : ஆக 28, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில் மாவட்ட வக்கீல்கள் சங்க அவசர கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பால நந்தகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ‘கூடலுார் பகுதியில் இருவரை தாக்கி கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; கடந்த இரண்டு நாட்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருந்த வக்கீல்களுக்கு பாராட்டு,’ தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவிடம் மனு அளிக்கப்பட்டது. வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
