sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கை, கால் இழந்த கலைஞரின் இசை மழையில் நனைந்த மக்கள்

/

கை, கால் இழந்த கலைஞரின் இசை மழையில் நனைந்த மக்கள்

கை, கால் இழந்த கலைஞரின் இசை மழையில் நனைந்த மக்கள்

கை, கால் இழந்த கலைஞரின் இசை மழையில் நனைந்த மக்கள்


ADDED : ஜூலை 24, 2011 02:45 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : கோத்தகிரியில், இரு கை, கால்களை இழந்த இசைக் கலைஞர் கிருஷ்ணமூர்த்தியின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.நீலகிரி கலாசார சங்கம், கோத்தகிரி எச்.ஆர்.

எம்., டிரஸ்ட் இணைந்து 'இசை ஊக்கம்' என்ற இசை நிகழ்ச்சியை கோத்தகிரியில் நடத்தின. இரு கைகள், இரு கால்களை இழந்த கலைமாமணி விருது பெற்ற 65 வயது இசைக் கலைஞர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு மணி நேரம் தனது வசீகர குரலில் இசை ரசிகர்களை கட்டிப் போட்டார்.நீலகிரி கலாசார சங்க தலைவர் சுந்தர் பேசுகையில், ''கிருஷ்ணமூர்த்தி, தனக்கு இரு கை, கால்கள் இல்லை என்பதை உணர்ந்தவுடன் தனது சகோதரி மூலம் இசை கற்க துவங்கி, 17 வயதில் முதல் சங்கீத நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.



இந்தியா, வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் அவர், பல கல்லூரிகளில் தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்,'' என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எச்.ஆர்.எம்., அறக்கட்டளை தலைவர் போஜராஜன் பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிருஷ்ணமூர்த்தியை நம்பிக்கைக்கு உதாரணமாக பல இடங்களில் மேற்கோள் காட்டி வருகிறார்,'' என்றார்.பாலமுரளி கிருஷ்ணா, முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர் பாகவதர் உட்பட பலரின் பாடல்களை பாடி பரசவப்படுத்திய கிருஷ்ணமூர்த்தியின் குரலுக்கு மெருகேற்ற, கோவை பாலசுப்ரமணியம் வயலின், உமையாள்புரம் மாலி மிருதங்கம், சென்சை கோவிந்தராஜன் தாளம் வாசித்தனர். நீலகிரி கலாசார சங்க அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us