இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
ADDED : அக் 27, 2026 11:35 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை கொட்டி தீர்த்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன.
கனமழையால் மூடப்பட்டிருந்த நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்கள் இன்று (அக்டோபர் 27) முதல் திறக்கப்படுகின்றன என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
இயல்புநிலைக்கு திரும்பியதால், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து துவங்கியுள்ளது. குன்னுார் - பர்லியார் - மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கும் பணி நடப்பதால், அந்த வழியில் மட்டும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
