/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தை திருமணம் வேண்டாம்; பள்ளி நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
/
குழந்தை திருமணம் வேண்டாம்; பள்ளி நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
குழந்தை திருமணம் வேண்டாம்; பள்ளி நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
குழந்தை திருமணம் வேண்டாம்; பள்ளி நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
ADDED : நவ 27, 2024 08:58 PM

பந்தலுார்; பந்தலுார் குற்றவியல் நீதிமன்ற, இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 'டியூஸ்' பள்ளியில், குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பது குறித்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நீதிமன்ற பணியாளர் ஷாலினி வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சுசீந்திரநாத் தலைமை வகித்து பேசுகையில், ''குழந்தை திருமணங்களை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குழந்தை திருமணம் செய்தால் பெற்றோர்கள் மட்டுமின்றி அதற்கு துணை நின்ற அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதில் மாணவர்கள் முன்னுதாரணமாக இருந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.