/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
13 நாட்களாக குடிநீர் இல்லை: சிரமப்படும் கிராம மக்கள்
/
13 நாட்களாக குடிநீர் இல்லை: சிரமப்படும் கிராம மக்கள்
13 நாட்களாக குடிநீர் இல்லை: சிரமப்படும் கிராம மக்கள்
13 நாட்களாக குடிநீர் இல்லை: சிரமப்படும் கிராம மக்கள்
ADDED : நவ 08, 2024 10:45 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில், 13 நாட்களாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு ஸ்கூல் மட்டம் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்த நிலையில், கடந்த, 13 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதன் அருகே, ஊராட்சி தலைவர் குடியிருப்பும் அமைந்துள்ள நிலையில், மோட்டாரை பழுது நீக்கி தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இப்பகுதி நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 'உடனடியாக மோட்டாரை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்ற பொதுமக்கள், 'இரண்டு நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.