/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று சென்ட் நிலத்தில் வீடு கட்ட அனுமதி இல்லை; தீர்வு காண 31 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்

ADDED : நவ 25, 2024 10:25 PM
குன்னுார்; 'நீலகிரியில் உள்ள ஊராட்சிகளில், 3 சென்ட்க்கு குறைவான இடத்தில், வீடு கட்டும் அனுமதிக்கான, நீண்ட கால போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்,' என, 31 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னுார், கூடலுார், கோத்தகிரி தாலுகாக்களில், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களில் பொதுவாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் வசிக்கின்றனர். மாநில அரசின் நகர்புற அமைப்பு இயக்கம் (டி.டி சி.பி.,) சார்பில் செயல்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர போர்டலில், கட்டட அனுமதி திட்டத்தில், 3 சென்ட்க்கு குறைவாக உள்ள இடங்களில் வீடுகள் கட்ட, அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
ஆனால் இதற்கு மேல் உள்ள நிலங்களுக்கு அனுமதி எளிதாக கிடைப்பதால், பிரம்மாண்ட கட்டடங்கள் அதிகரித்து வருகிறது.
ஆனால், நீலகிரியில், 80 சதவீதத்திற்கு மேலான பட்டாக்கள், மூன்று சென்ட்க்கும் குறைவாக உள்ள நிலையில், உள்ளூர் மக்கள் வீடுகள் கட்ட முடியாததால், இதற்கு தீர்வு காண அனைத்து ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் முடிவு செய்ய, நீலகிரி மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில், இதற்கான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், குன்னுார் உபதலை ஊராட்சியில், தலைவி பாக்கியலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மாவட்ட கட்டட பொறியாளர் சங்க செயலாளர் விஜயகாந்த் முத்துகிருஷ்ணன் பேசுகையில், ''இந்த பிரச்னை தொடர்பாக, 31 ஊராட்சிகளில் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,''என்றார்.