/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணறு அமைத்தும் தண்ணீர் இல்லை; ரூ.4 லட்சம் வீணானது மட்டுமே மிச்சம்
/
கிணறு அமைத்தும் தண்ணீர் இல்லை; ரூ.4 லட்சம் வீணானது மட்டுமே மிச்சம்
கிணறு அமைத்தும் தண்ணீர் இல்லை; ரூ.4 லட்சம் வீணானது மட்டுமே மிச்சம்
கிணறு அமைத்தும் தண்ணீர் இல்லை; ரூ.4 லட்சம் வீணானது மட்டுமே மிச்சம்
ADDED : ஏப் 03, 2025 11:25 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பஜார் பகுதியில், 4 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி பஜார் பகுதியில் உள்ள, கூட்டுறவு ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு வங்கி பயன்பாட்டிற்காக சேரங்கோடு ஊராட்சி சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 அடி ஆழத்திற்கு கிணறு அமைக்கப்பட்டது.
கிணறு அமைக்கப்பட்டது முதல், ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊழியர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. இதனால், தங்கள் பயன்பாட்டிற்காக வேறு பகுதியில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் புகார் செய்த பின், சேரங்கோடு ஊராட்சி மற்றும் கூடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில்,' கிணறு அமைக்கும் ஒப்பந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், தண்ணீர் சுரக்கும் இடம் எது என்பது தெரியாமல், பெயரளவிற்கு கிணறு அமைத்துள்ளது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்; உரிய ஆய்வு மேற்கொண்டு கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
மக்கள் கூறுகையில்,'கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், 4 -லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிணற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இதுவரை வரவில்லை. இதனால், ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் அவதிப்படுகிறோம். கோடை காலத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். இதனால் இந்த கிணறு அமைத்த ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

