/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மார்க்கெட் கடைகள் காலி செய்ய 'நோட்டீஸ்'
/
குன்னுார் மார்க்கெட் கடைகள் காலி செய்ய 'நோட்டீஸ்'
ADDED : செப் 11, 2025 09:16 PM
குன்லுார்; குன்னுார் மார்க்கெட் கடைகள் இடித்து கட்டுவதற்காக, கடைகளை காலி செய்ய நேற்று முதல் 'நோட்டீஸ்' வழங்கும் பணி துவக்கப்பட்டது.
குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட, 41.50 கோடி ரூபாய் மதிப்பில் அரசு திட்டமிட்டது. கடந்த ஜூன் மாதம், காலி செய்யப்பட்ட கடைகளுக்கு நகராட்சி நோட்டீஸ் வழங்கிய போது, 46 பேர் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வக்கீல் ஆணையர் நியமன அறிக்கை, ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இறுதி விசாரணையில், நகராட்சி கடைகளை காலி செய்து, புதிய கட்டுமான பணிகளை துவங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று முதற்கட்டமாக, 12 நகை கடைகளுக்கு காலி செய்ய, நகராட்சி வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் 'நோட்டீஸ்' வழங்கினர். இவர்களுக்கு, தற்காலிக மாற்று கடைகள், பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கப்பட்ட அறைகளில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., -தி.மு.க., கவுன்சிலர்கள், 'தீபாவளி மற்றும் பொங்கல் வரை கால அவகாசம் வேண்டும்,' என, கேட்டும் பலனில்லை. இதனால், வியாபாரிகள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.