தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

 புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

 புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்


ADDED : ஜூலை 07, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

கூடலுார் நகர சுகாதார மையத்தில், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார்.

நகர சுகாதார மைய டாக்டர் கவுதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணி ஆகியோர், 'புற்றுநோயை எதிர்கொள்வது, பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்,' குறித்து விளக்கினர். தொடர்ந்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கூடலுார் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார், அரசு வட்டார சுகாதார நிலைய பாலியட்டிவ் பிரிவு செவிலியர் நிசாந்தினி, செவிலியர் மேற்பார்வையாளர் செல்வி, ஆஷா பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us