/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைப்பாதையில் இடையூறு; இ---டாய்லெட் கட்டடத்தால் சிக்கல்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்

ADDED : டிச 27, 2024 10:21 PM
ஊட்டி; 'தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதையை ஒட்டி உள்ள இ-டாய்லெட்டை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சீசன் காலங்கள் உட்பட பிற நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பூங்கா செல்லும் நடைபாதையை ஒட்டி இ--டாய்லெட் வசதி நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டது. நகரில் தற்போது, 10  இடங்களில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
அதில், தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள இ--டாய்லெட் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த இ-டாய்லெட் நடைப்பாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. 'இதனை அகற்ற வேண்டும்,'என, அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.