/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு : அதிகாரிகள் திடீர் ஆய்வு
/
கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு : அதிகாரிகள் திடீர் ஆய்வு
கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு : அதிகாரிகள் திடீர் ஆய்வு
கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு : அதிகாரிகள் திடீர் ஆய்வு
ADDED : நவ 06, 2025 10:57 PM
கோத்தகிரி: -கோத்தகிரி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உத்தரவு உள்ளது. இந்த தடையை மீறி, பல பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.
நீலகிரி பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் கட்டபெட்டு பகுதிகளில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சில மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வகை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபாயம் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.