/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு மானியம் வழங்க வேண்டும்: நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

ADDED : நவ 06, 2025 10:57 PM
-மஞ்சூர்: குந்தை சீமெ நல சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குந்தை சீமெ நல சங்க சிறப்பு கூட்டம் மஞ்சூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பார்ப்பத்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நல சங்க தலைவர் கணபதி, துணை தலைவர்கள் மணிகாந்தி, போஜாகவுடர், மகாலிங்கன், இணை செயலாளர் பரமசிவன், தேவர் கவுடர் ராமாகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில், படுகரின மக்களின் குல தெய்வமான காடஹெத்தை கோயில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை சமுதாய மக்கள் வழங்கும் நிதியின் வாயிலாக மட்டுமே நடைபெற வேண்டும். கோயில் நிர்வாக பணிகளை சமுதாய மக்களே மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் நலன் கருதி பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவிற்கு ரூ.40 நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை விவசாயிகள் நலன் கருதி பசுந்தேயிலைக்கு மானியம் வழங்க நடவடிக்கை வேண்டும்.
மேலும், படுக சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.