ADDED : நவ 06, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில், பயணிகள் மழைக்கு ஒதுங்க , சிறிய நிழற்குடைகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னூர் சமூக ஆர்வலர் ஹேன் குமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் வருகை தருகின்றனர். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலைபாதையில், அடர்ந்த வனப்பகுதிகளில், மழையின் போது, ஒதுங்க இடமில்லை. ஆங்காங்கே சிறிய நிழற்குடைகள் அமைத்தால், மழை காலங்களில் நின்று செல்ல பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு ஹேன் குமார் கூறியுள்ளார்.

