/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் குடிநீர் தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
தொடரும் குடிநீர் தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தொடரும் குடிநீர் தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தொடரும் குடிநீர் தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
UPDATED : ஜூலை 10, 2025 07:46 AM
ADDED : ஜூலை 09, 2025 09:37 PM
குன்னுார்; குன்னுார் கொலக்கம்பை பகுதியில் கடந்த, 5 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னுார் அருகே மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கொலக்கம்பையில் நுாற்றுகணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு போலீஸ் ஸ்டேஷன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்கள், தேவாலயம், பள்ளிவாசல், வங்கிகள், தபால் அலுவலகம் உள்ளன.
இங்கு கடந்த, 5 நாட்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், இங்குள்ள மக்கள் மட்டுமின்றி, அத்தியாவசிய பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் சுற்றுப்புற கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு மூடப்படாமல் கற்கள் பெயர்ந்து திறந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகையில்,''கொலக்கம்பைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணற்றில், 16 எச்.பி., மோட்டார் அகற்றப்பட்டு, 10 எச்.பி. மோட்டார் மாற்றப்பட்டதில் குடிநீர் விநியோகம் பாதிக்கிறது. இதற்கு தீர்வு காண அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல்வேறு இடங்களிலும் குடிநீருக்காக திண்டாட வேண்டியுள்ளது. தடையில்லாமல் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.