தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பேரிடர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

பேரிடர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

பேரிடர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு


UPDATED : அக் 18, 2026 07:08 PM

ADDED : அக் 18, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:08 PM ADDED : அக் 18, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில் பேரிடர் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வடகிழக்கு பருவ மழை தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தல் படி, ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட, கடநாடு கிராமம் சாமிநாத நகர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக கூடிய இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல, குந்தா வட்டத்திற்கு உட்பட்ட, இத்தலார் பகுதியில், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் ஆய்வு செய்தார். குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட, கெல்பாரத் நகர் பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆய்வில், பருவ மழையின் போது, பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us