தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அபாயத்தை தடுக்க புதர் செடிகள் அகற்றம்!

அபாயத்தை தடுக்க புதர் செடிகள் அகற்றம்!

அபாயத்தை தடுக்க புதர் செடிகள் அகற்றம்!


UPDATED : அக் 18, 2026 07:18 PM

ADDED : அக் 18, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:18 PM ADDED : அக் 18, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: முதுமலையில் மேய்ச்சலில் ஈடுபடும் வனவிலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியில் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர், மைசூரு தேசிய நெடுஞ்சாலை தமிழக, கேரள, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், தொரப்பள்ளி முதல் தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா வரையிலான 16 கி.மீ., தூரம் சாலை முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் செல்கிறது.

இப்பகுதியில் யானை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. இவைகள், உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கிறது.

இதனால், இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது, அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாலையோரங்களில் வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்களால் சாலையோரம் வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவது இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இவைகள், திடீரென சாலையை கடந்து செல்லும் போது, வாகனங்களில் சிக்கும் ஆபத்து உள்ளது.

வனவிலங்குகள் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதர் செடிகள் அகற்றும் பணயில் பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us