sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு; குன்னுார் கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

/

கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு; குன்னுார் கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு; குன்னுார் கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு; குன்னுார் கோடேரி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு


ADDED : செப் 12, 2025 11:13 PM

Google News

ADDED : செப் 12, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் கோடேரி கிராமத்தில் ஒரே வீட்டு எண்ணில், 79 வாக்களார்கள் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, தாசில்தார் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜன., 6ல் வெளியிட்ட, குன்னுார் சட்டசபை தொகுதியில் உள்ள, கோடேரி கிராமம், பாகம், 210ல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை, 12வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்ததில் குறைகளை கண்டறிந்தார்.

அதில், ஓட்டு சாவடிக்கு உட்பட்ட வார்டில் எண், 12,17 மட்டுமே உள்ள நிலையில், 11, 12, 17 வார்டுகள் என குறிப்பிட்டுள்ளதுடன், 9, 10 வார்டுகளின் வாக்காளர்களும் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்தது. மேலும், 'வீட்டு எண், 10ல் 9 பேர்; 9ல் 14 பேர்; 11ல் 79 பேர் மற்றும் 12ல் 33 பேர்,' என, குளறுபடி இருந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த வாக்காளர் பெயர்கள் பல பகுதிகளில் சிதறியுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து வெளியேறியவர்களின் பெயர்கள் தற்போதும் இடம் பெற்றுள்ளன.

மனோகரன் கூறுகையில், '' இது போன்ற வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு, ஓட்டுகள் திருடுவதாக அரசியல் கட்சியினர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

818 வாக்காளர்கள் உள்ள இந்த ஓட்டுச்சாவடியில் பட்டியலில், வார்டு வரையறை கூட, செய்யாமல் குளறுபடிகள் இருப்பது, தேர்தல் அலுவலர்களின் அலட்சியமா அல்லது தரவுகள் பதிவேற்றும் போது ஏற்படும் கவனக்குறைவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சிறப்பு தீவிர திருத்தம் செய்வதால், லட்சம் பேர் நீக்கி, ஓட்டு திருடுகிறார்கள் என கூறுவதை விட்டுவிட்டு, 'டேட்டா' பதிவுகளில் உள்ள தவறுகள் சரி செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

கோடேரி கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட குன்னுார் தாசில்தார் ஜவகர் கூறுகையில்,'' இங்குள்ள வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்து, அதில் உள்ள குழப்பங்களை தீர்க்கும் வகையில், பார்ம்-8ல் விண்ணப்பித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us