தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்


ADDED : மார் 16, 2025 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 11:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்;

குன்னுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மவுன்ட்ரோடு வழியாக பெட்போர்டு, சிம்ஸ்பார்க் வரையிலான பகுதிகளில், அரசு மருத்துவ மனை, பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.

இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வழியாக நடந்து செல்வதுடன், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும், நடைபாதை வசதியை ஏற்படுத்தி தராததாலும், சாலையில் நடந்து செல்லும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சுற்றுலா டாக்சி கார்களுக்கு, தனியாக வேறு இடங்களில் ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைக்கவும் கலெக்டரிடம் தெரிவித்தும், போலீசார் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய தனி குழு ஏற்படுத்தி, தீர்வு காண, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''மவுன்ட் ரோட்டில், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், அந்த பகுதியில், ஆம்புலன்ஸ் கூட குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மார்க்கெட் முதல் சிம்ஸ்பார்க் வரையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்வதுடன், மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us