மருத்துவ மாணவிக்கு தொல்லை ஆம்னி பஸ் டிரைவர் கைது
மருத்துவ மாணவிக்கு தொல்லை ஆம்னி பஸ் டிரைவர் கைது
ADDED : ஜூலை 03, 2026 03:26 AM
ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவி ஒருவர் விடுமுறைக்கா க சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கடந்த, 1ம் தேதி மீண்டும் ஊட்டி வர வேண்டி, சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் வந்துள்ளார். இரவு, 8:30 மணிக்கு சென்னையில் புறப்பட்ட பஸ் அதிகாலை நேரத்தில் ஊட்டிக்கு வந்தது. அப்போது, மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி சப்தம் போட்டுள்ளார். உடனடியாக மற்ற பயணிகள் எழுந்து பார்த்தபோது, பாலியல் தொல்லை கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி சிங்கப்பெண் படை எஸ்.ஐ., சரோனியா தலைமையில் விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆம்னி பஸ்சில் மாற்று டிரைவராக வந்த மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. சிங்கப்பெண் படை போலீசார் அவரை ஊட்டி, பி1 போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அன் பரசு, தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
