கூடலுாரில் வளர்ச்சி பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கூடலுாரில் வளர்ச்சி பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 03, 2026 03:25 AM
கூடலுார்: கூடலுார் அருகே நடுவட்டம் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து, கலெக்டர் லட்சுமிபவ்யா நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள்; ஸ்ரீமதுரை ஊராட்சி அங்கன்வாடியில் குழந்தைகள் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், 125 நாள் வேலை திட்டத்தின் கீழ், 5.5 லட்சம் ரூபாய் மதிப்பில், குண்டூர் - மணலி கால்வாய் துார்வாரும் பணி; ஓடக்கொல்லி பகுதியில் வன உரிமை சட்டம், 6வது மாநில நிதி குழு திட்டத்தின் கீழ், 7.5 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் சிமென்ட் சாலையை பார்வையிட்டார்.
ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளி; மண் வயல் சுகாதார நிலையம், வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், 80 வீடுகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாடுகளுக்கு ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
மேலம்பலம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 64.96 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் சிமென்ட் சாலை பணி; கூடலுார் மாவட்ட தலைமை மருத்துவமனை செய்ல்பாடு குறித்து பார்வையிட்டார்.
ஆய்வில், கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
