/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமன் செய்யும் பணிகள் முடிந்தால் வாகனங்களை நிறுத்தலாம்
/
சமன் செய்யும் பணிகள் முடிந்தால் வாகனங்களை நிறுத்தலாம்
சமன் செய்யும் பணிகள் முடிந்தால் வாகனங்களை நிறுத்தலாம்
சமன் செய்யும் பணிகள் முடிந்தால் வாகனங்களை நிறுத்தலாம்
ADDED : நவ 12, 2024 09:54 PM

கோத்தகிரி ; கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் முன், மழையில் இடிந்த கட்டடத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டு, அங்கிருந்த குழியில் மண் நிரப்பப்பட்டுள்ளது. அதனை சமன் செய்யப்படாத நிலையில், பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால், அலுவலகம் முன் ஓரிரு வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு இடம் கிடைத்துள்ளது.
இதே பகுதியில் கட்டடம் முழுமை பெறாமல் பாதியில் விடபட்டுள்ளதால் சமன் செய்யும் பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளது. இந்த பணி நிறைவு பெறும் பட்சத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடம் கிடைக்கும். அத்துடன், அலுவலகத்திற்குள் வாகனங்கள் சென்றுவர முடியும்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் பாதியில் விடப்பட்டுள்ள கட்டட பணியை விரைந்து முடித்தால் பயன் ஏற்படும்.