ADDED : செப் 10, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
பந்தலுாரில் இருந்து அய்யன்கொல்லி பகுதிக்கு நேற்று மாலை மினி பஸ் சென்றது. அய்யன்கொல்லி அருகே கோட்டைப்பாடி பகுதியில் எதிரே வந்த ஸ்கூட்டரும், பஸ்சும் மோதிக் கொண்டன. அதில், குந்தலாடி பகுதியை சேர்ந்த, உப்பட்டி தனியார் பள்ளி பஸ் டிரைவர் சர்ஜூ காயமடைந்தார். காயமடைந்த அவர் சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சேரம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
