ADDED : ஆக 09, 2026 10:31 AM
அ நிறம் | அளவு
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 63.
இவர் நேற்று, தண்ணீர் குழாயை சீரமைக்க தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் இன்று காலை தேடிய போது, அவர் அப்பகுதியில் புலி தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
