/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை சீசனை முன்னிட்டு மே 1 முதல் ஒரு வழிப்பாதை
/
கோடை சீசனை முன்னிட்டு மே 1 முதல் ஒரு வழிப்பாதை
ADDED : ஏப் 18, 2025 11:58 PM
ஊட்டி: ''ஊட்டி கோடை சீசனை ஒட்டி, மே 1ம் தேதி முதல் ஒரு வழிப்பாதை நடைமுறைக்கு வரும்,'' என, எஸ்.பி., தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, இ- பாஸ் திட்டத்தின் கீழ், கடந்த, 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை வார நாட்களில், 6,000 வாகனங்கள்; சனி, ஞாயிறு நாட்களில், 8,000 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதை தவிர, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மே 1ம் தேதி முதல், ஊட்டிக்கு வருவதற்கு ஒரு வழிபாதை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி எஸ்.பி.,நிஷா கூறுகையில்,'' ஊட்டி கோடை சீசனை ஒட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மே, 1ம் தேதி முதல் ஊட்டியிலிருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும்; மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் வாகனங்கள் குன்னுார் வழியாகவும் வரும் வகையில், ஒரு வழிபாதை நடைமுறைக்கு வர உள்ளது,'' என்றார்.