தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'ஆன்லைன்' விளையாட்டு: விழிப்புணர்வு முகாம்

'ஆன்லைன்' விளையாட்டு: விழிப்புணர்வு முகாம்

'ஆன்லைன்' விளையாட்டு: விழிப்புணர்வு முகாம்


UPDATED : அக் 14, 2026 03:18 PM

ADDED : அக் 14, 2026 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 03:18 PM ADDED : அக் 14, 2026 02:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆன்லைன் விளையாட்டு அடிமையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து, விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஆணைய உறுப்பினர் முனைவர் சாரங்கன் தலைமை வகித்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார்.

முகாமில், 'ஆன் லைன்' விளையாட்டின் தீமைகள் குறித்தும், இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில், 'ஆன் லைன் சூதாடத்தை தடை செய்ய சட்டம் இயற்றி, அதற்கென தனி ஆணையத்தை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கட்டமைத்த நாட்டின் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த, 2019--24 வரை, ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பண இழப்பு மற்றும் அடிமைத்தனம் காரணமாக, 47 பேர் தற்கொலை செய்துகொண்டு நிலையில், 2025 -26 ஜூலை, 31 வரை இத்தகைய, சம்பவங்கள், 6 மட்டுமே நடந்துள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்த்து, கல்வியிலும், விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்,' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதில், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., கள் வசந்தகுமார், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உளவியல் துறை பேராசிரியர்கள் வெங்கடேஷ் மற்றும் மதன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us