/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் விலை உயரும் ஊட்டி பீன்ஸ்
/
வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் விலை உயரும் ஊட்டி பீன்ஸ்
வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் விலை உயரும் ஊட்டி பீன்ஸ்
வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் விலை உயரும் ஊட்டி பீன்ஸ்
UPDATED : ஏப் 10, 2025 11:04 PM
ADDED : ஏப் 10, 2025 09:23 PM
குன்னுார், ; ஊட்டி பீன்ஸ் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில், சற்று விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை தோட்ட காய்கறிகளான, கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்டவை, மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
அதில், ஊட்டி பீன்ஸ், புஷ் பீன்ஸ் கடந்த, 1ம் தேதி கிலோவிற்கு, 80 முதல் 140 ரூபாய் வரை விலை இருந்தது. நேற்று முன்தினம், 50 முதல் 70 ரூபாய் வரை என இருந்தது. இந்நிலையில் நேற்று சற்று ஏற்றம் கண்டு புஷ்பீன்ஸ், 70 ரூபாய் வரை விற்றது. ஊட்டி பின்ஸ், 70 முதல் 75 ரூபாய் வரை விற்றது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.