/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வசதி இல்லை; நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம்

ADDED : நவ 22, 2025 05:11 AM

ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில், சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை,'என, குற்றம் சாட்டி முற்றுகை போராட்டம் நடந்தது.
ஊட்டியில், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி, 480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை திறக்கப்பட்டது.
மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில், 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளாக சிகிச்சை பெற தேவையான படுக்கை வசதிகள், பழங்குடியின மக்களுக்கு தனியாக, 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 460 பேர் பணியில் இருக்க வேண்டிய நிலையில், தற்போது, 300 பேர் மட்டுமே, பல்வேறு பிரிவுகளில் பணி புரிந்து வருகின்றனர்.
இதனால், உயர்தர சிகிச்சைகள் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் சார்பில், நேற்று காலை ஊட்டி கலெக்டர் அலுவலம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை வகித்தார்.
அதில், 'ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில், போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். கழிப்பிடம் உட்பட பிற தேவைகளுக்கு லாரியில் தண்ணீர் கொண்டு வரும் அவலம் நீடிப்பதால், தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். முறையாக 'டயாலிஸ்' சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
போதிய உபகரண வசதி இல்லாததால். உயர்தர சிகிச்சைக்கு நோயாளிகள் அலை கழிக்கப்படுவதுடன், கோவை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யும் அவலம் தொடர்கிறது.
இதற்கு தீர்வு காண வேண்டும்,' என, வலிறுத்தப்பட்டது. கோரிக்கை மனு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.