/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 36 கோரிக்கைகள்
/
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 36 கோரிக்கைகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 36 கோரிக்கைகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 36 கோரிக்கைகள்
ADDED : நவ 22, 2025 05:12 AM

ஊட்டி: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 'தோட்டக்கலைதுறை வாயிலாக, குளிர் பதன கூடம் மற்றும் பண்ணை குட்டை அமைக்க தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, தனித்தனியாக அமைக்க, மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில், சிற்பம் கட்டும் அறை, குளிர்பதன கூடம், குளிரூட்டப்பட்ட வாகனம் போன்றவை ஒருங்கிணைத்து அமைக்க, 56 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் பயன்பெற ஏதுவாக, தனித்தனியாக வழங்க அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கம், கூடலுார் உழவர் உற்பத்தியாளர் குழு, கோவை தமிழக விவசாயிகள் சங்கம், ஆரி கவுடர் விவசாயிகள் சங்கம், குரு சித்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், விவசாயிகள் குறைதீர்க்கும் சங்கம், நீர் பிடிப்பு பகுதி விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் உபதலை விவசாயிகள் குழு ஆகிய சங்கங்கள் சார்பில், 36 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதில், கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, தோட்டக்கலை துணை இயக்குனர் நவனீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

