ADDED : ஜூலை 08, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, ஊட்டி, குன்னுார், என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை விற்பனை ஆனது. அதன் பின் மெல்ல மெல்ல விலை உயர்ந்து வந்தது. நேற்று ஊட்டி கிழங்குகள் அதிகபட்சமாக ரூ.2,600க்கு விற்பனை ஆனது.

