/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி உருளைக்கிழங்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாக வாய்ப்பு
/
ஊட்டி உருளைக்கிழங்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாக வாய்ப்பு
ஊட்டி உருளைக்கிழங்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாக வாய்ப்பு
ஊட்டி உருளைக்கிழங்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாக வாய்ப்பு
ADDED : ஜூலை 29, 2025 08:35 PM
மேட்டுப்பாளையம்; இந்தியா--பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு பிரிட்டனுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன.
இந்த மண்டிகளுக்கு தினமும் வரும் உருளைக்கிழங்குகளில் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கிறது. மீதம் உள்ள 50 சதவீதம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஊட்டி உருளைக்கிழங்களுக்கு என தனி ருசி உள்ளதால், மேட்டுப்பாளையம் மண்டிகளில் இருந்து ஊட்டி உருளைக்கிழங்குகள் இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியா---பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, பிரிட்டன் சந்தைக்குள் இந்திய விளைப்பொருட்களும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதியாகும் ஊட்டி உருளைக்கிழங்குகள், பிரிட்டனுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர் பாபு கூறுகையில், ஊட்டி உருளைக்கிழங்குகளின் நிறம், தரம், எடை, சுவை போன்ற பல்வேறு காரணங்களினால் இலங்கை, மாலத்தீவு, உள்ளிட்ட நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் வாயிலாக ஏற்றுமதி ஆகிறது.
இனி பிரிட்டனுக்கும் ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் முன் வர வேண்டும். இதனால் ஊட்டி உருளைக்கிழங்குகள் உலகளவில் புகழ் பெறும். விவசாயிகளுக்கு லாபம் பெருகும். விவசாயிகள் இதனை எதிர்பார்க்கின்றனர், என்றார்.-------