/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷன் குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்றம்
/
ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷன் குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்றம்
ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷன் குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்றம்
ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷன் குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்றம்
ADDED : செப் 01, 2025 11:40 PM

ஊட்டி: ஊட்டியில் உள்ள பழமையான முதல் போலீஸ் ஸ்டேஷன், குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட மார்க்கெட் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில், 1850ம் போலீஸ் ஸ்டேஷன் கட்ட திட்டமிடப்பட்டு, குன்றின் மீது கட்டுமான பணிகள் நடந்துள்ளது. அதன்பின், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கூட்டங்கள் இங்கு நடத்தப்பட்டன. 1860ம் ஆண்டு முதல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட தொடங்கியது. இதுவே, ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷனாகும்.
இந்நிலையில், கடந்த, 2005ம் ஆண்டு இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போது, 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டடத்தை இடிக்க கூடாது,' என, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்று, அந்த கட்டடத்தின் அருகிலேயே புதிய கட்டடம் கட்டும் பணி நடந்தது.
கடந்த, 2016ம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்த பாரம்பரிய கட்டடம், 'காவல் துறையின் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்படும்,' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், இந்த கட்டடம் காவல் துறையினரின் குழந்தைகளை பராமரிக்கும் மையமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில்,''இந்த பராமரிப்பு மையத்தில், குழந்தைகளை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள்; கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் என வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கட்டடம், 175 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் உள்ளது,'' என்றார்.