/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தற்காலிக கடைகளை ஆட்டோ ஸ்டாண்டில் அமைக்க எதிர்ப்பு
/
தற்காலிக கடைகளை ஆட்டோ ஸ்டாண்டில் அமைக்க எதிர்ப்பு
ADDED : டிச 19, 2024 11:29 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார் வி.பி., தெருவில், சி.ஐ.டி.யு., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., சங்க பொறுப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க மாநில பொறுப்பாளர் சிவராமன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
அதில், 'மார்க்கெட் நகராட்சி கடைகளை இடித்து கட்டுவதற்காக, தற்காலிக கடைகளை ஆட்டோ ஸ்டாண்டில் அமைக்க கூடாது; மலை மாவட்டத்தில் ஓலோ, ஊபர், பைக், டாக்சி போன்றவற்றை அனுமதிக்க கூடாது; போலீசார் ஆன்லைன் அபராதம் விதிக்க கூடாது,' என்பன, உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. சங்க நிர்வாகி யோகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். செல்வம் நன்றி கூறினார்.