/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
369 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு
/
369 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு
ADDED : மே 28, 2025 11:18 PM
பந்தலுார்,; பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், அதிகாரிகளின் ஆய்விற்கு பின்னர், 369 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அனைவருக்கும் வீடு கட்டுவதற்கான உத்தரவை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் வழங்கினார். 'ஒரு வீட்டிற்கு தலா, 3.5 லட்சம் மற்றும் கழிப்பிடம் கட்ட, 12 ஆயிரம் ரூபாய்,' என, மொத்தம், 3.62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'பயனாளிகள் தங்கள் வீடுகளை தரமாகவும், நல்ல முறையிலும் கட்டி கொள்ள வேண்டும், தனிநபர்களிடம் வீடு கட்டும் பணியை வழங்கி பின்னர் வீடு பணி நிறைவு பெறவில்லை என, புகார் கூறக்கூடாது,' என்றனர்.