/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு
/
பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு
பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு
பழங்குடி மாணவர்கள் எழுதிய 'எமது கதே' புத்தகம் வெளியீடு
ADDED : நவ 02, 2025 10:46 PM

ஊட்டி: -ஊட்டியில் பழங்குடியினர் மாணவர்கள் உருவாக்கிய 'எமது கதே' புத்தகம் வெளியிடப்பட்டது.
கோத்தகிரி கரிக்கையூர் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கரிக்கையூர் பகுதியில், கிராமிய சூழல், இயற்கை வாழ்வு முறை, வீட்டிலிருந்து பள்ளி வரை நடக்கும் அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்களது சொந்த கற்பனையில், கதைகளையும், ஓவியங்களையும் எழுதி, 'எமது கதே' என பெயரிட்டு, புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
இது, பழங்குடியின மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளி உலகம் தெரிய சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வழிகாட்டுதல் படி, கலெக்டரின் தனி எழுத்தர் (கல்வி) பிரமோத், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன், இந்த நுால் புத்தக திருவிழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

