/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வட்டார அளவிலான அறிவியல் போட்டியில் அசத்தல் :மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
/
வட்டார அளவிலான அறிவியல் போட்டியில் அசத்தல் :மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
வட்டார அளவிலான அறிவியல் போட்டியில் அசத்தல் :மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
வட்டார அளவிலான அறிவியல் போட்டியில் அசத்தல் :மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
ADDED : நவ 25, 2025 07:10 AM

ஊட்டி: வட்டார அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, நீலகிரி மாவட்டம் சார்பில் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, 'வானவில் மன்றம்' என்ற செயல்பாடு பள்ளி கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
மனப்பாடம் செய்வதிலிருந்து செயல்முறை அடிப்படையிலான கற்றலுக்கு மாறுவது, இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இதன் வாயிலாக மாணவர்களின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் சோதனைகள் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்று கொள்கின்றனர். குறிப்பாக, மாணவர்களை எதிர்கால விஞ்ஞானிகளாக உருவாக்கும் பணி இதன் மூலம் சாத்தியப்படுகிறது. இந்நிலையில், வட்டார அளவிலான போட்டி நேற்று ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் நடந்தது. 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் அர்ஜூனன் மேற்பார்வையில் போட்டி நடந்தது. போட்டிகளின் நடுவர்களாக தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் முதுகலை ஆசிரியர் ஸ்ரீனிவாசன், அணிக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி உயிரியல் ஆசிரியை நந்தினி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியை கவிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர்.
அதில், பாக்கிய நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல் முதலிடம், அரசு உயர்நிலைப்பள்ளி சோலுார் கோத்தகிரி பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நித்திஷ் இரண்டாமிடம் , காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் ஹஷிப் மூன்றாமிடம் பிடித்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஊட்டி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

