ADDED : நவ 05, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர், ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களை கண்டுக்களித்த அவர்கள், கோத்தகிரி வழியாக, மேட்டுப்பாளையம் சென்றனர்.
அப்போது, மேகமூட்டமான காலநிலையில், குஞ்சப்பனை பகுதிக்கு கார் சென்றபோது, கார் விபத்துக்குள்ளாகி, தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் விசாரணை நடத்தினர்.

