/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அரசு பள்ளியில் ஓசோன் நாள் அனுசரிப்பு
/
ஊட்டி அரசு பள்ளியில் ஓசோன் நாள் அனுசரிப்பு
ADDED : செப் 19, 2025 08:37 PM

ஊட்டி; ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில் சர்வதேச ஓசோன் நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஷிரின் வரவேற்று பேசுகையில், ''சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. மாணவர்கள் அறிவு திறன் கொண்டு உலகளாவிய சூழல் மற்றும் உள்ளூர் சூழல் மாற்றங்களை கருத்தில் கொண்டு இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல் தொழில்நுட்ப திட்டங்களை உருவாக்குவது அவசியம்,'' என்றார்.
ஆசிரியர் சகாதேவி, ''ஓசோன் படலம் பாதிப்பிற்கு மனித செயல்கள் தான் முக்கிய காரணமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த, வீடுகளில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகள், வாகனங்களில்தேவைக்கு அதிகமாக குளிர்சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசியதாவது:
ஐக்கிய நாடுகள் சபை மாட்ரீஸ் நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு முதல், கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓசோன் தினம், இந்த வருடம் சர்வதேச ஓசோன் நாள் கருப்பொருளான 'வாழ்விற்கு அடிப்படை ஓசோன்' என்ற தலைப்பில் முக்கிய கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனில் இருந்து வரும் புற ஊதாகதிர்கள், நேரடியாக தாக்காமல் அதனை தடுக்கும் ஓசோன் படலம் வலு இழக்க செய்யும் ரசாயனங்களால் இயற்கை வளங்களை பாதிக்க செய்கிறது. கடல் வாழ் உயிரினங்கள், தாவர வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மாணவர்கள், ஓசோன் படலத்தை பாதிக்கும் ரசாயனங்களுக்கு மாற்றாக, இயற்கைக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
வாசனை திரவியங்கள், ரசாயன உதட்டு சாயங்கள், தலைமுடிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரேயர். சூழல் பாதிப்பில்லாத பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் செலினா வயலட், ரகீதன் மற்றும் ராஜ்குமார் உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.