/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
10 ஆண்டுகளாக சீரமைக்காத பக்காசூரன் மலை சாலை
/
10 ஆண்டுகளாக சீரமைக்காத பக்காசூரன் மலை சாலை
ADDED : ஜன 02, 2025 12:48 AM
குன்னுார், ; குன்னுார் ட்ரூக்- பக்காசூரனின் மலை சாலை பத்தாண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் மலை, ட்ரூக், டான்டீ குடியிருப்பு,செங்கல்புதூர் செங்கல் கொம்பை, ஜோதி கொம்பை உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இங்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, நான்சச் பகுதியில் இருந்து சாலை சீரமைக்கப்பட்டது. மழை நீர் செல்ல போதிய கால்வாய்கள் அமைக்கப்படாததால், மழை நீர் சாலையில் சென்று சேதமடைந்துள்ளது. சில இடங்களில் மழை நீர் சென்று, சாலையோரம் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் கூறுகையில்,''சாலையை சீரமைக்க கோரி உலிக்கல் பேரூராட்சி இடம் பல முறை வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை. 'பக்காசூரன் மலைப்பகுதியை, சுற்றுலா ஸ்தலமாக மேம்படுத்தப்படும்,' என, குன்னுார் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் சுற்றுலா துறை அமைச்சராக இருந்த போது தெரிவித்திருந்தார்.
இதனால், தற்போது சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கின்றன. சேதமான சாலையில், அரசு பஸ் உட்பட வாகனங்கள் பழுதடைவதுடன், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும், என்றார்.

