/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி, குன்னுாரில் பழனிசாமி பிரசாரம்
/
ஊட்டி, குன்னுாரில் பழனிசாமி பிரசாரம்
ADDED : செப் 23, 2025 06:15 AM
ஊட்டி; ஊட்டி, குன்னுாரில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, 2 நாட்கள் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் பழனிச்சாமி, பகல், 11:00 மணிக்கு, குன்னுார் பஸ் நிலைய சந்திப்பில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, ஊட்டியில் மதியம், 1:00 மணிக்கு ஏ.டி.சி., சுதந்திர திடல் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
மாலை, 4:00 மணிக்கு சமுதாய அமைப்பு தலைவர்கள், விவசாயிகள், வியாபாரிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிகிறார். மாலை, 5:00 மணிக்கு கூடலுார் புறப்படுகிறார். இரவு அங்கு தங்கும் அவர், நாளை காலை, 10:00 மணிக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை சந்திக்கிறார். பகல், 11:15 மணிக்கு, கூடலுார் பஸ் நிலைய பகுதியில் பேசுகிறார். பழனிசாமி வருகையை ஒட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.