/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முடங்கியது மூன்றாவது கண் கண்காணிப்பதில் சிக்கல்
/
முடங்கியது மூன்றாவது கண் கண்காணிப்பதில் சிக்கல்
ADDED : பிப் 28, 2024 09:56 PM
அன்னுார் : கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் முடங்கி விட்டன.
கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னுாரை அடுத்து பெரிய நகரம் கணேசபுரம். இங்கு பவுண்டரி, ஸ்பின்னிங் மில், ஸ்டீல் ரோலிங் மில் மற்றும் மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன.
இங்கு விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் திருட்டு வாகனங்களை கண்டறியவும் கணேசபுரம் நகரிலும், கடத்துார் பிரிவு, ஓரைக்கால் பாளையம் பிரிவு, காட்டம்பட்டி பிரிவு ஆகிய இடங்களில், அன்னுார் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
கடந்த ஓராண்டாக சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடந்ததால், கேமராக்கள் அகற்றப்பட்டன. தற்போது தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது; ஆனாலும், கேமராக்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.
அப்பகுதி வார்டு உறுப்பினர் சுகுணா கோவிந்தராஜ் கூறுகையில், ''இதுகுறித்து, போலீசிலும், ஊராட்சி நிர்வாகத்திலும் தகவல் தெரிவித்துள்ளோம். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் வாகனங்களை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருந்தன.
சில மாதங்களாக கேமராக்கள் செயல்படாததால் விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

