/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தைகளுடன் பேச பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
/
குழந்தைகளுடன் பேச பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
குழந்தைகளுடன் பேச பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
குழந்தைகளுடன் பேச பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
UPDATED : ஆக 30, 2025 06:54 AM
ADDED : ஆக 29, 2025 09:12 PM

பந்தலுார்; 'பெற்றோர் தங்கள் குழந்தைகள் கூறும் பிரச்னைகளை, காது கொடுத்து கேட்க நேரம் கொடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
பந்தலுார் 'டியூஸ் மெட்ரிக்' பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் வரவேற்று, மாணவர்களிடம் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.
வக்கீல் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினால் வாழ்வில் மேம்பட முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் எவ்வாறு படிக்கின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல், புதிதாக ஏதேனும் பொருட்களை எடுத்து வந்தால் அது குறித்து விசாரித்து, அது தவறான வகையில் இருந்தால் அதனை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்,'' என்றார்.
நீதிபதி பிரபாகரன் பேசுகையில், ''மாணவர்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், படித்தால் மட்டுமே வாழ்வில் உயர முடியும். அதேபோல், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வி மட்டும் இன்றி, தினசரி பள்ளியில் நடந்த நிகழ்வுகள், சக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பகிர்வுகள் குறித்தும் பேச வேண்டும்.
கண்டிப்புடன் பேசாமல் நட்புடன் பேசினால், குழந்தைகளின் பிரச்னைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக, போதை பொருட்கள் பயன்பாடு குறித்து தினசரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாணவ சமுதாயத்தை காப்பது, ஆசிரியர் மற்றும் பெற்றோரின் தலையாய பணியாகும்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால், தைரியத்துடன் வந்து வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை நாடினால் அதற்குரிய தீர்வு ஏற்படுத்தி தரப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் போலீசார், பெற்றோர்,மாணவர்கள் பங்கேற்றனர். நீதிமன்ற பணியாளர் ஷாலினி நன்றி கூறினார்.

