'பார்க்கிங்' கட்டணத்தை குறைக்க வேண்டும்' :வணிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
'பார்க்கிங்' கட்டணத்தை குறைக்க வேண்டும்' :வணிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
UPDATED : ஆக 12, 2026 06:42 PM
ADDED : ஆக 12, 2026 06:31 PM

ஊட்டி: 'சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம்;பார்க்கிங் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, வணிகர் சங்க பொது குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நீலகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், பிங்கர் போஸ்ட் பகுதயில் நடந்தது. மாவட்டத் தலைவர் முகமதுபாரூக் தலைமை வகித்தார். செயலாளர் குலசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில்,'பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிக கடைகள் அமைக்க கூடாது; சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் , பார்க்கிங் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி மற்றும் கல்லட்டி வழியாக ஊட்டிக்கு வருவதற்கு சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்க வேண்டும்; முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்ட காலத் திட்டமாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்; யு.பி.ஐ. , பணப்பரிவர்த்தனை கட்டணத்தை வணிகர்களிடம் வசூலிப்பதை அரசு கைவிட வேண்டும்,' உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விளங்கங்களை அளித்தார். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில், போதையில்லா தமிழகத்தை உருவாக்க, உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் லியாகத்அலி, கோவை மண்டல தலைவர் சந்திரசேகர், இணை செயலாளர் ராஜாமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
