பி.இ.எம்.எல்., நிறுவனத்துக்கு ‘ஜெம்’ விருது வழங்கி கவுரவிப்பு
பி.இ.எம்.எல்., நிறுவனத்துக்கு ‘ஜெம்’ விருது வழங்கி கவுரவிப்பு
ADDED : ஆக 12, 2026 05:54 PM
பாலக்காடு: அரசு மின்னணு சந்தைப்படுத்துதல் தளத்தின் (ஜெம்) வாயிலாக, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு அதிக மதிப்பில் ஆர்டர்களை வழங்கியதற்கான விருது பி.இ.எம்.எல்., (பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெ்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
‘ஜெம்’ அமைப்பின், 10வது நிறுவன தின விழா, புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த ஆக., 10ம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு அதிக மதிப்பில் ஆர்டர்களை வழங்கியதற்கான ‘ஜெம்’ விருதை, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்., நிறுவனத்திற்கு வழங்கினார்.
அந்நிறுவனத்தின் சார்பில் அதன் நிதித் துறை இயக்குனர் அனில் ஜெரத் விருதைப் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து, நிதித் துறை இயக்குனர் அனில் ஜெரத் கூறுகையில், ‘‘பொது கொள்முதல் துறையில் குறு மற்றும் சிறு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவித்தல், ‘ஜெம்’ தளம் வாயிலாக குறு மற்றும் சிறு நிறுவனங்ககளிடமிருந்து கொள்முதலை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டின் சிறு தொழில் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பி.இ.எம்.எல்., நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்கு அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
